Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஏப்பம் விடக்கூடாது, ஜீன்ஸ் அணியக்கூடாது..... ஊழியர்களை அதிரவைக்கும் எஸ்பிஐ

SBI
Last Updated: செவ்வாய், 9 ஜனவரி 2018 (17:31 IST)
அலுவலகத்திற்கு ஊழியர்கள் எப்படி வர வேண்டும் என பல கட்டுபாடுகள் விதித்து மனித வளத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

 
அதில், நிறுவனம் குறிப்பிடும் ஆடைகளில்தான் வர வேண்டும். கூட்டம் நடைபெறும் போது ஏப்பம் விடுவதை தவிர்க்க வேண்டும். ஷீதான் அணிந்து வர வேண்டும். டி-ஷடர்ட்ஸ், ஜீன்ஸ், அரைக்கால் பேண்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ ஆகியவற்றை அணியக்கூடாது. பெல்ட், ஷூ ஒரே நிறத்தில் இருக்க வேண்டும்.
 
உடம்பில் ஏற்படும் துர்நாற்றத்தை தவிர்க்க வாசனை திரவியங்களை பயன்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களை சந்திக்கும்போது நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பையும் நீங்கள் எடுத்துச் செல்கிறீர்கள். பெண் அதிகாரிகள் இந்திய மற்றும் மேற்கத்திய ஆடைகளை அணியலாம். இவ்வாறு எஸ்பிஐ மனித வளத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :