வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 ஜனவரி 2018 (17:32 IST)

குடும்பத்துடன் போராட்டத்தில் குதித்த போக்குவரத்து ஊழியர்கள் : ஸ்தம்பிக்கும் தமிழகம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 
ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக பணிக்கு செல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையேல் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் மற்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் எச்சரித்தும் 5 நாளாக இன்று போராட்டம் தொடர்கிறது.
 
இந்நிலையில், ஊழியர்களுக்கான நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என சென்னை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மேலும், ஊழியர்கள் போராட்டத்தை கைவிடவில்லை எனில், நோட்டீஸ் அனுப்பிவிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.
 
ஆனாலும், தங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என போக்குவரத்து சங்கங்கள் அறிவித்துவிட்டன. இந்நிலையில், 22 தொழிற்சங்கத்தை சேர்ந்த 2 ஆயிரம் பேர் சென்னை சேப்பாக்கத்தில் குடும்பத்துடன் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
போராட்டம் முடிவிற்கு வந்து விரைவில் பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், ஊழியர்களின் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.