வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (13:25 IST)

டிரெண்டிங் சராஹா ஆப்: பயனர்களுக்கு சாதகமா? பாதகமா?

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல லட்சம் பேர் டவுன்லோடு செய்து பயன்படுத்தி வரும் ஆப் சராஹா. தற்போது இந்த ஆப் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. 


 
 
இந்த ஆப் மூலம் முகம் தெரியாவதவர்களிடம் இருந்து பரிந்துரை மற்றும் கமெண்ட்களை பெற முடியும். மற்றவர்கள் தரும் கருத்துக்களை கொண்டு ஒருவர் தன்னை மாற்றிக் கொள்ளலாம் என்பது இந்த செயலியை உருவாக்கியவர்களின் கருத்து. 
 
சராஹாவில் மற்றவர்களின் ப்ரோஃபைல்களை பார்த்து, அவர்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும். மெசேஜ் பெற்றவர்கள் அனுப்பும் மெசேஜை மட்டிமே பார்க்க முடியும், அதை யார் அனுப்பியது என்ற தகவல் தெரியாது.
 
இதில் மெசேஜ்களை பிளாக் செய்ய முடியும். ஆனால், தனி நபர் பாதுகாப்பு அம்சங்கள் சற்று கேள்விகுறியாவே உள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் மட்டும் இதுவரை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் சராஹா ஆப்பை டவுன்லோடு செய்துள்ளனர்.