1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 27 செப்டம்பர் 2018 (15:21 IST)

6 மாதத்தில் ஜியோ 5ஜி?

தொலைத்தொடர்பு துறை ஜியோ வரவுக்கு முன் ஜியோ வரவுக்கு பின் என இரண்டு பாகமாகவே காணப்படுகிறது. ஏனெனில் ஜியோ வந்த பிறகு டெலிகாம் சந்தையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. 
 
ஜியோ சலுகைகளை வாரி வழங்கி வாடிக்கையாளர்களை தன்பக்கம் இழுப்பதால், தங்கலது மார்க்கெட்டை நிலைநிறுத்திக்கொள்ள மற்ற நிறுவனங்களும் சேவைகளை வழங்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன. 
 
மேலும், நாட்டில் 4ஜி சேவை பயன்பாடு வேகமாக அதிகரிக்க ஜியோ மிகமுக்கிய காரணமாக இருக்கிரது. தற்போது ஜியோ ஆறு மாதத்தில் 5ஜி சேவைகளை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல் பின்வருமாறு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்ற ஆறே மாதங்களில் இந்தியாவில் 5ஜி சேவைகளை ஜியோ வழங்கும். 
 
அடுத்த ஆண்டு இறுதியில் 5ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற இருக்கும் பட்சத்தில், இந்தியாவில் ஜியோ 5ஜி சேவைகள் 2020 ஆம் ஆண்டின் மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.