வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 1 செப்டம்பர் 2018 (10:48 IST)

ஓவர் நைட்டில் காலியான ஏர்டெல்: வோடபோன் ஐடியா லிமிட்டெட் எதிரொலி!

வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைய இத்தனை நாட்களாக அதற்கான செயல்முறைகள் நடைபெற்று வந்ததன. வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் தற்போது இணைந்துள்ளன. 
 
இதன் மூலம் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக வோடபோன் ஐடியா லிமிட்டெட் உருவெடுத்துள்ளது. இந்த நிருவனம் தற்போது நிலையன்ஸ் ஜியோவிற்கு சமமான பலம் கொண்டு போட்டியளிக்கும் நிலைக்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. 
 
ஒன்றிணைந்திருக்கும் இரு நிறுவனங்கள் டெலிகாம் சந்தையின் வருவாயில் 32.2% பங்குகளை கொண்டிருக்கும். வோடபோன் ஐடியா லிமிட்டெட் வாடிக்கையாளர் எண்ணிக்கை சுமார் 40 கோடியை எட்டியுள்ளது. 
 
வோடபோன் - ஐடியா இணைப்பின் மூலம் அதிக வாடிக்கையாளர்களை கொண்டிருந்த தொலைத்தொடர்பு நிறுவனம், அதிக வருவாய் சந்தை மதிப்பு கொண்டிருந்த நிறுவனம் போன்ற பெருமைகளை ஏர்டெல் ஓவர் நைட்டில் இழந்துள்ளது.
 
வோடபோன் ஐடியா லிமிட்டெட் நிறுவனத்தின் நிர்வாக தலைவராக குமார் மங்கலம் பிர்லாவும் புதிய தலைமை செயல் அதிகாரியாக பலேஷ் ஷர்மா செயல்படுகின்றனர். மேலும், 12 இயக்குநர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.