1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2019 (12:48 IST)

போங்கடா டேய்! ஏர்டெல், ஜியோவுக்கு பெப்பே... ரூட்டை மாற்றும் யூசர்ஸ்...

வாடிக்கையாளர்கள் நீண்ட வேலிடிட்டி ரீசார்ஜுக்கு பதிலாக மாதாந்திர ரீசார்ஜ் சலுகைகளை தேர்வு செய்ய துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி டெலிகாம் நிறுவனங்களாக உள்ள ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் சேவை கட்டணத்தை உயர்த்தியது. இதனால் வாடிக்கையாளர்கள் வழக்கத்திற்கு மாறாக கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
 
 ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் வருடாந்திர சலுகையை தேர்வு செய்வோருக்கு அதிகளவு தள்ளுபடி மற்றும் இலவசங்களை வழங்கி வருகின்றன. எனவே, பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் நீண்ட வேலிடிட்டி கொண்ட சலுகைகளுக்கு மாறாக மாதாந்திர ரீசார்ஜ் சலுகைகளை தேர்வு செய்ய துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆம், 3 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட சலுகைகளுக்கு மாறாக ஒரு மாத ரீசார்ஜ் சலுகைகளை தேர்வு செய்யும் போது வாடிக்கையாளர்கள் 40 முதல் 50 சதவீதம் வரை கட்டணத்தை சிக்கனப்படுத்த முடிகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.