1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 5 நவம்பர் 2016 (11:21 IST)

இந்திய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள்

தினமும் பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களைப் பற்றி தெரியாத சில அரிய செய்திகளை தெரிந்துகொள்ளுங்கள்.


 
 
காகித நாணயம்:
 
காகிததினாலான நாணயம் 18ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது. முதலில் பாங்க் ஆஃப் பெங்காள், பாங்க் ஆஃப் பம்பாய், மற்றும் பாங்க் ஆஃப் மெட்ராஸ் ஆகிய தனியார் வங்கிகள் காகிதத்தினாலான பணத்தை அச்சிட்டன.
 
ஆங்கிலேய அரசு 1861ஆம் ஆண்டு, இந்திய அரசிற்கு காகித பணம் அச்சிடுவதற்கு உரிமை வழங்கியது.
 
1935-ல் ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா நிறுவப்பட்டது, அதற்கு முன்பு வரை காகித பணம் அச்சிடும் உரிமையை இந்திய அரசாங்கம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
1938-ல் ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியாவினால் அச்சிடப்பட்ட முதல் காகித பணம் 5 ரூபாய் நோட்டு ஆகும். அது ஆறாம் ஜார்ஜ் மன்னரின் உருவத்தினைக் கொண்டிருந்தது. அதே ஆண்டில் ரூ10, ரூ100, ரூ1000 ஆகிய ரூபாய் நோட்டுகளும் வெளியிடப்பட்டன.
 
தற்போது, எத்தனை நோட்டுகள் அச்சிட வேண்டும் என்பதை ஆர்பிஐ முடிவு செய்கிறது. ஒரு ரூபாய் நோட்டு அடிக்கும் பொறுப்பு இந்திய அரசைச் சார்ந்தது, எனவே ஒரு ரூபாய் நோட்டுகளில் இந்திய நிதித் துறை செயலாளரின் கையொப்பம் காணப்படுகிறது. 1940இல் போர் கால நடவடிக்கையாக ஒரு ரூபாய் நோட்டு மறு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
 
அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள்:
 
இந்தியாவில் இன்று அதிக மதிப்புடையது 1,000 ரூபாய் நோட்டு தான். ஆனால் ரிசர்வ் வங்கியால் அச்சிடப்பட்ட 5,000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் 1954 முதல் 1978 வரையிலான காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்தது.
 
10,000 ரூபாய் நோட்டு பணத்தினை இந்திய அரசாங்கம் 1938-ல் அச்சிட்டது. 1946-ஆம் ஆண்டுக் கணக்கில் வராத பணத்தினை ஒழிப்பதற்காக ரூ.1,000 மற்றும் ரூ.10,000 ஆகியவை செல்லாததாக அறிவிக்கப்பட்டன. 
 
இவை மீண்டும் 1954-ல் நடைமுறைக்கு வந்தது. இந்த முறை ரூ5,000 ரூபாய் தாளும் அச்சிடப்பட்டது. இவை 1978-ல் மீண்டும் திரும்பி பெறப்பட்டது.
 
பாகிஸ்தானில் இந்திய ரூபாய்:
 
பாகிஸ்தான் நாட்டின் விடுதலைக்குப் பின் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் வசதிதகளைப் பெறும் வரை, பாகிஸ்தான் இந்திய அரசால் அச்சிடப்பட்ட ரூபாய் தாள்களையே பயன்படுத்தி வந்தது. 
 
ஆனால், இந்திய அரசால் அச்சிடப்படும் ரூபாய் தாள்களில் இருக்கும் காலி இடத்தில் Government of Pakistan என்று அச்சிடப்பட்டிருக்கும்.
 
5 ரூபாய் கடத்தலில் பங்களதேஷ்:
 
ஒரு காலத்தில் இந்தியாவில் பயன்படுத்தப்படும் 5 ரூபாய் நாணயங்களைப் பங்களாதேஷ் நாட்டிற்குப் பிளேட் செய்வதற்காகக் கடத்தப்பட்டது.
 
10 ரூபாய் நாணயம்:
 
ரிசர்வ் வங்கியால் அச்சிடப்படும் 10 ரூபாய் நாணயத்தை உருவாக்க அரசுக்குச் செலவாகும் தொகை 6.10 ரூபாய் மட்டுமே.
 
இந்தியாவில் உலோகம் மற்றும் அச்சிடத் தொழில்நுட்ப தட்டுப்பாடு காரணமாக ரிசர்வ் வங்கி பல முறை வெளிநாடுகளில் நாணயங்களை அச்சிட்டுள்ளது.
 
அமெரிக்க டாலர்:
 
1971ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரச் சந்தையில் ஒரு ரூபாய்க்கு 13 அமெரிக்க டாலர் சமமாகும். இன்று 67.43ரூபாய்க்கு 1 அமெரிக்க டாலர் சமமாகிறது.
 
பூஜ்ஜியம் ரூபாய் நோட்டு:
 
இந்தியாவில் ஊழலை ஒழிப்பதற்காக 5th Pillar என்ற ஒரு என்ஜிஓ அமைப்புப் பூஜ்ஜியம் ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. ஆனாலும் ஊழல் குறையவில்லை.