வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : சனி, 2 நவம்பர் 2024 (08:29 IST)

தமிழ்நாடு முழுவதும் விஜய் சுற்றுப்பயணம்: தொடங்குகிறார் தீவிர அரசியலை..!

Vijay
தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, நடிகர் விஜய் மாபெரும் மாநில மாநாட்டை நடத்தி முடித்த நிலையில், அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சிக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் விமர்சனத்தை செய்து வருகின்றன; நாம் தமிழர் கட்சி உட்பட கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் விஜயை விமர்சிக்கின்றன.
 
அதிமுக மட்டுமே விஜய்யை விமர்சிக்காமல் இருக்கும் நிலையில், விஜய் அந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்காமல் அடுத்த கட்ட கட்சி பணிகளை முன்னெடுத்து வருகிறார். அதன்படி, மாநில மாநாட்டை முடித்த விஜய், அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் என்றும், அவர் மக்களை நேரடியாக சந்திக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த சுற்றுப்பயணம் டிசம்பர் 27 ஆம் தேதி கோவையில் தொடங்கி, நெல்லையில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு நாட்கள் தங்கி, மக்கள் சந்திப்பு, நிர்வாக ஆலோசனைக் கூட்டம், பொதுமக்கள் கூட்டம், மற்றும் நல உதவி நிகழ்ச்சிகள் என பிரிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva