புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 6 ஜூன் 2019 (16:57 IST)

ரூ.251-க்கு 102 ஜிபி டேட்டா: ஜியோவின் சூப்பர் டூப்பர் ரீசார்ஜ்!!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 
 
ஜியோ நிறுவனம் தற்போது பலரால் பார்க்கப்படும் உலகக் கோப்பை போட்டிகளுக்காக புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆம், ரூ.251 ரீசார்ஜ் செய்தால், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை எந்த வித சந்தா கட்டணமும் இல்லாமல் நேரலையாக பார்க்கலாம். 
 
வாடிக்கையாளர்கள் ஜியோ டிவி, ஹாட் ஸ்டார் வழியாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை காணலாம். ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு ஆகிய இரு வாடிக்கையாளர்களுக்கும் இந்த ஆஃபர் வழங்கப்படும். 
 
ரூ.251-க்கு 102 ஜிபி அதிவேக டேட்டா என்பது கிரிக்கெட் போட்டிக்காக மட்டும் பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வேலிடிட்டி 51 நாட்களாகும்.