Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜியோ, ஏர்டெல்லை பின்னுக்குதள்ளி முன்னேறிய ஐடியா!!

Last Modified புதன், 6 டிசம்பர் 2017 (15:03 IST)
மைஸ்பீடு செயலி நிஜ நேரத்தில் டேட்டா டவுன்லோடு மற்றும் அப்லோட் வேகங்களை கணக்கிடும். அந்த வகையில், தற்போது இந்த கணக்கீடுகள் வெளியாகியுள்ளன.

அப்லோடு வேகங்களில் ஐடியா நெட்வொர்க் நிறுவனம் நொடிக்கு 6.4 எம்பி வேகம் வழங்கி ஜியோ மற்றும் ஏர்டெல்லை பின்தள்ளியுள்ளது. இதன் பின்னர் வோடபோன் நிறுவனம் நொடிக்கு 5.8 எம்பி, ரிலையன்ஸ் ஜியோ நொடிக்கு 4.3 எம்பி மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனம் நொடிக்கு 4.0 எம்பி வழங்கியுள்ளது.


டவுன்லோடு வேகத்தை பொருத்த வரை ஜியோ 4ஜி டவுன்லோடு வேகம் நொடிக்கு 21.9 எம்பி அளவு இருந்துள்ளது. இது வோடபோன் வழங்கும் டவுன்லோடு வேகத்தை விட இருமடங்கு அதிகமாகும்.

வோடபோன் 4ஜி டவுன்லோடு வேகம் நொடிக்கு 8.7 எம்பியாக இருந்துள்ளது. ஐடியா செல்லுலார் மற்றும் பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் முறையே நொடிக்கு 8.6 எம்பி மற்றும் 7.5 எம்பி வேகம் வழங்கியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :