கூகுள் பே-க்கு ஆப்பு: அக்கவுண்ட் வைத்திருக்கும் பயனர்களுக்கு ஷாக்

Last Updated: புதன், 10 ஏப்ரல் 2019 (16:40 IST)
கூகுள் பே நிறுவனம் ரிசர்வ் வங்கியின் உரிய அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கூகுள் பே நிறுவனத்தின் செயல்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 
 
டெல்லியை சேர்ந்த அபிஹிஜித் மிஸ்ரா என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் கூகுள் இந்தியா டிஜிட்டல் நிறுவனத்தின் சார்பில் செயல்படும் கூகுள் பே(GooglePay) செயலி அங்கீகாரம் இன்றி இயங்குகிறது என தெரிவித்திருந்தார். 
 
மேலும், அங்கீகாரமின்றி செயல்படும் கூகுள் பே நிறுவனத்தின் செயல்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும், உரிய அங்கீகாரம் இன்றி பணப்பரிமாற்ற சேவை நடத்திய கூகுள் இந்தியா நிறுவனத்துக்கு அபராதம் விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் இன்றி எந்த ஒரு பேமென்ட் சிஸ்டமும் இயங்ககூடாது. ஆனால், கூகுள் பே செயலி எவ்வாறு இயங்குகிறது, யார் அனுமதித்தது? என ரிசர்வ் வங்கிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
 
மேலும், ரிசர்வ் வங்கி மற்றும் கூகுள் இந்தியா நிறுவனம் இதற்கு பதில் அளித்து நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :