செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2019 (17:00 IST)

திருப்பரங்குன்றம் தேர்தலில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர் நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே. போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில்  திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ,கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கை திருப்பப் பெறுவதாக சரவணன் அறிவித்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் தீப்பை வாசித்தார்.
 
ஜெயலலிதா மருத்துவமனயில் இருந்த போது கைரேகை பெற்றதில் முறைகேடு என திமுகவை சேர்ந்த சரவணன் என்பவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இன்று இதுகுறித்து தீர்ப்பு வந்துள்ளது.
 
மேலும், கடந்த ஆண்டு ஏ,கே.போஸ் இறந்ததை அடுத்து தன்னை வேட்பாளராக அறிக்கக்கோரியும், தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்கவேண்டுமென்ற திமுக சரவணன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம்.இதில் வேட்பாளர் அங்கீகார விண்ணப்பத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்துக்கு பதிலாக கைரேகை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நேற்று சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் உயிரிழந்தார். இந்நிலையில் சட்டப்பேரவையில் இருந்த காலி இடங்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்தாக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.