வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (11:17 IST)

பெட்ரோல், டீசலுக்கு தீபாவளி ஆஃபர்; மக்களிடம் வியாபாரம் நடத்தும் மத்திய அரசு

தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல், டீசல் விலை குறையும் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.


 

 
பஞ்சாப் மாநிலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதே பெட்ரோல் விலை உயரக் காரணம். ஆனால் வரும் நாட்களில் கச்சா எண்ணெய் குறையக்கூடும். தீபாவளி பண்டிகை நெருங்கும் போது பெட்ரோலிய பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்.
 
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்து இருக்கும் நிலையில் இந்தியாவில் அதிகப்படியான விலையில் விற்கபடுவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் பெட்ரோலிய துறை அமைச்சர் தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல், டீசல் விலை குறையும் என கூறியுள்ளார். மத்திய அரசின் இந்த செயல்பாடு, கார்ப்ரேட் நிறுவனங்கள் மக்களிடம் வியாபாரம் செய்வது போல் உள்ளது.