Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பான் கார்ட் மைகிரேஷன் என்றால் என்ன? அதை பற்றி தெரியுமா?

Sugapriya Prakash| Last Updated: சனி, 30 செப்டம்பர் 2017 (10:50 IST)
தனிநபருக்கு வழங்கப்படும் பான் எண்ணானது 10 இலக்க எண் மற்றும் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டது. இது வருமான வரித் துறையினரால் வழங்கப்படும் நிரந்தர கணக்கு எண்ணாகும். 
 
 
பான் எண்ணை அனைத்து நிதி பரிவர்த்தனைகளுக்கும், வரி செலுத்துவதற்கும், வருமான வரி மற்றும் சொத்து வரி தாக்கல் செய்யும் போது இணைக்க வேண்டும்.
 
பான் கார்ட் மைகிரேஷன்: 
 
ஒருவர் தான் இருக்கும் மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு நிரந்தரமாக மாறும் போது பான் கார்டின் அசசிங் அலுவலரை மாற்றவேண்டும். இதுவே பான் மைகிரேஷன் என அழைக்கப்படுகிறது.
 
பான் கார்டை மைகிரேட் செய்வது எப்படி?  
 
# பான் மைகிரேஷனுக்கு அசசிங் ஆப்பிசரை மாற்ற வேண்டும். அதற்கு தற்போது பயன்பாட்டில் இருக்கும் பான் கார்டின் ஏஓ யார் என்று கண்டறிய வேண்டும்.
 
# ஏஓ யார் என்பதை வருமான வரித்துறை இணையதளம் மூலம் கண்டறியலாம். அதன் பின்னர் ஏஓ-க்கு மைகிரேஷன் குறித்து கோரிக்கை வைக்க வேண்டும்.
 
# ஏஓ டிரான்ஸ்ஃபர் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் பான் டிரான்ஸ்ஃபர் கோரிக்கை வருமான வரித்துறை கமிஷனரிடம் செல்லும். 
 
# கமிஷனர் அனுமதி அளித்த பிறகு புதிய ஏஓ-விடம் வருமான விவரங்கள் அளிக்கப்பட்டு வரி தாக்கல் செய்ய முடியும்.
 
# இதை பற்றிய மேலும் விவரங்களுக்கும் ஐடி துறையின் புதிய மொபைல் செயலியான ஆயகார் சேது மூலம் ‘காட் ஏ பிராபளம்' என்பதை தேர்வு செய்து பான் மைக்ரேஷன் என்பதை தேர்வு செய்து விவரங்களை பெற்றுக்கொள்ளாம்.


இதில் மேலும் படிக்கவும் :