10 ஜிபி + 500 எஸ்எம்எஸ் + அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்....

Last Modified திங்கள், 30 ஜூலை 2018 (14:56 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகை ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வழங்கப்பட்டுள்ளது. 
 
ரூ.75 விலையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 10 ஜிபி டேட்டா மற்றும் 500 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 15 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 
 
இந்த சலுகையை நீட்டிக்க ரூ.98 அல்லது அதற்கும் அதிக தொகை செலுத்தி 18 நாட்களுக்கு வேலிடிட்டி பெறலாம். இந்த புதிய ரூ.75 சலுகை ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே வழங்கி வரும் ரூ.98 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. 
 
ஜியோ ரூ.98 சலுகையில் 2 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்குகிறது.  
 
பிஎஸ்என்எல் வழங்கியுள்ள இந்த சலுகை தற்சமயம் ஆந்திர மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுவதாக குறிப்பிட்டிருக்கிறது. 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :