செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 26 அக்டோபர் 2017 (10:52 IST)

ஏர்டெல்லின் அடுத்த ஸ்மார்ட் மூவ்: அலறும் போட்டி நிறுவனங்கள்...

ஏர்டெல் நிறுவனம் லாவா நிறுவனத்துடன் இணைந்து 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


 
 
இதற்கு முன்னர் கார்பன் நிறுவனத்துடன் இணைந்து கார்பன் A40 இந்தியன் எனும் 4ஜி ஸ்மார்ட்போனினை ஏர்டெல் வெளியிட்டது.
 
தற்போது லாவா நிறுவனத்துடன் இணைந்து ரூ.1,699 என்ற விலையில் ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளது. லாவா போனின் விற்பனை முறை கார்பன் ஸ்மார்ட்போன் போன்றே இருக்கும் என கூறப்படுகிறது. 
 
ஏர்டெல் மற்றும் லாவா 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு சார்ந்த இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் வாய்ஸ் கால் சலுகையும் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது. 
 
இது குறித்த மற்ற செய்திகளில் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. ஜியோ துவங்கி வைத்த போன் அறிமுக கலாச்சாரம் தற்போது ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்களாலும் வளர்ந்து வருகிறது.