வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 7 அக்டோபர் 2017 (14:06 IST)

டவுன்லோட் ஸ்பீட்: ஜியோவை பின்னுக்கு தள்ளிய ஏர்டெல்!!

இந்தியாவின் மொபைல் இண்டர்நெட் டவுன்லோட் வேகத்தை எந்த நிறுவனம் வழங்குகிறது என்ற ஆய்வை ஓபன் சிக்னல் என்னும் நிறுவனம் மேற்கொண்டது. 


 
 
ஆய்வின் முடிவுபடி இந்தியாவில் பாரதி ஏர்டெல் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. ஏர்டெல் சராசரியாக நொடிக்கு 9.15 எம்பி வேகத்தில் டவுன்லோடு இருந்துள்ளது. 
 
ரிலையன்ஸ் ஜியோ டவுன்லோடு வேகம் நொடிக்கு 5.81 எம்பி-யாகவும், வோடபோன் டவுன்லோடு வேகம் நொடிக்கு 7.45 எம்பி  மற்றும் ஐடியா 7.4 எம்பி என்ற அளவில் டேட்டா வேகம் வழங்கியுள்ளது. 
 
இதே போல் 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க் இணைய வேகங்களும் தனித்தனியாக கணக்கிடப்பட்டுள்ளது. இவை இரண்டிலும் ஜியோவை பின் தள்ளி ஏர்டெல் நிறுவனம் முன்னிலை பெற்றுள்ளது.