வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 4 அக்டோபர் 2017 (21:38 IST)

ஜியோ அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்; ஆப்பு வைத்த முகேஷ் அம்பானி: அதிர்ச்சியில் பயனர்கள்!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையை வழங்கி வந்தது. 


 
 
இந்நிலையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவைக்கு புதிய கெடுபிடிகள் போடப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
 
அதன்படி வாய்ஸ் கால் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக ஐந்து மணி நேரம் மட்டுமே பேச முடியும். 
 
மேலும் வாய்ஸ் கால் அளவு ஒரு மணி நேரத்தை கடக்கும் போது அழைப்புகளில் இடையூறு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இவை ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடுவையும் மீறி வாய்ஸ் கால் மேற்கொண்டால் அந்த நாளில் மற்ற அழைப்புகள் மேற்கொள்ள முடியாது.
 
தொடர்ந்து வாய்ஸ் கால் மேற்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களது ஜியோ கணக்கில் ரூ.149-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஆதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படலாம் என தெரிகிறது.