2ஜிபி-யில் இலவச பேக்அப் மற்றும் மெமரி ஸ்டேட்டஸ்: ஏர்செல் ஆப்!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 30 அக்டோபர் 2017 (16:51 IST)
பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல் புதிய ஆப்ளிகேஷன் ஒன்ரை அறிமுகம் செய்யவுள்ளது. அதில் 2 ஜிபி நினைவக திறனுக்கு இலவச பேக்அப் சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது. 

 
 
இந்த ஆப் மூலம் புகைப்படங்கள், மொபைல் காண்டாக்ட்ஸ், வீடியோக்கள், ஆடியோக்கள் மற்றும் கோப்புகள் ஆகியவற்றை சேமித்து வைத்து கொள்ளமுடியும்.
 
கிளவுட் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த சேவை இயங்கும் என தெரிகிரது. இதன் மூலம் மொபைல் போன் காணாமல் போனலும் மொபைல் எண் கொண்டு அனைத்தையும் திரும்பப்பெற முடியும்.
 
2ஜிபி திறனுள்ள தகவல்களை இதில் சேமித்து வைத்துகொள்ள முடியும் என்று ஏர்செல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் அதிக தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
 
மேலும், பல சாதனங்களில் உள்ள தகவலை எளிதாக அணுகுவதற்கு இது பயன்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் தகவல்கள் மிக பாதுகாப்பாக இருக்கும் என ஏர்டெல் அறிவித்துள்ளது.
 
இந்த ஆப் தற்போது ஆண்ட்ராய்டு மொபைலில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :