செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 7 மார்ச் 2019 (13:35 IST)

விநாடிக்கு 20 ஜிபி: ஜூன் முதல் 5ஜி நெட்வோர்க்!!

இந்தியாவில் மக்கள் அனைவரும் 3ஜி சேவையில் இருந்து 4ஜிக்கு மாறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், 5ஜி நெட்வொர்க் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 
 
ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை தயாரித்து, இந்திய சந்தையில் களமிறக்க திட்டமிட்டு வருகின்றன. அந்த வலையில் சாம்சங் மற்ரும் எல்.ஜி ஏற்கனவே 5ஜி ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளன. 
 
எனவே மத்திய அரசு 5ஜி நெட்வொர்க் சேவையை இந்தியாவில் துவங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, 5ஜி மொபைல்போன் அலைவரிசை ஒதுக்கீடு இந்தியாவில் ஜூன் மாதம் துவங்கவுள்ளது. 
முதல்கட்டமாக அலைவரிசையை ஏலத்தில் விடுவது, அதன் பின்னர் அலைவரிசை வேகத்தை சோதித்து பார்ப்பது என அனைத்து நடவடிக்கைகளும் தொலைத் தொடர்புத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
 
சீனா, அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகள் 5ஜி சேவையை பயன்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் இப்போதுதான் 5ஜி சேவை முதற்கட்ட பணிகளை மேற்கொள்வது மிகவும் தாமதமான செயலாக பார்க்கப்படுகிறது. 
 
இணைய வேகத்தை பொருத்த வரை 4ஜி நெட்வொர்க்கில் விநாடிக்கு 1 ஜிபி என்ற அளவில் பெறும் டவுன்லோட் வேகம் 5ஜி தொழில்நுட்பத்தில் விநாடிக்கு 20 ஜிபி ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.