செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 18 நவம்பர் 2018 (11:59 IST)

ஒரு ஆப் டவுன்லோட் செய்தால்... 1 ஜிபி டேட்டா இலவசம்!

இந்திய தொலைத்தொடர்பு துறையில் பல நிறுவனங்கள் போட்டி காரணமாக வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
அறிவிப்பின் படி, பிஎஸ்என்எல் வாடிக்கையாலர்கள் முதல் முறை பிஎஸ்என்எல் செயலியை டவுன்லோடு செய்யும் போது சிறப்பு சலுகையாக 1 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.  
 
ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய சலுகை பிஎஸ்என்எல் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்வோருக்கு வழங்கப்படுகிறது. 
 
பிஎஸ்என்எல் செயலி மேம்படுத்தப்பட்டு உள்ளதால் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் மேம்படுத்தப்பட்ட செயலி 8 எம்பி அளவில் கிடைக்கிறது. செயலியை இன்ஸ்டால் செய்யும் பயனர்கள் தங்களது மொபைல் போன் நம்பருடன் சைன் அப் செய்ய வேண்டும். 
 
அவ்வாறு செய்யும் போது 1 ஜிபி 2ஜி/3ஜி டேட்டா பயனர்களின் அக்கவுன்ட்டில் சேர்க்கப்படும். இந்த இலவச டேட்டா டிசம்பர் 31, 2018 வரை வழங்கப்படும் என கூறப்படுகிறது.