1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. பிஃபா 2018
Written By
Last Modified: செவ்வாய், 10 ஜூலை 2018 (12:42 IST)

ஃபிபா உலகக்கோப்பை அரைஇறுதி போட்டி: பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் இன்று மோதல்

ஃபிபா உலகக்கோப்பை காலபந்து போட்டியின் அரைஇறுதிப்போட்டியில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் இன்று மோதவுள்ளன.
 
ரஷியாவில் நடந்து கொண்டிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் கால்இறுதி சுற்றில் இங்கிலாந்து, குரோஷியா, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் வெற்றி பெற்று அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
 
இந்நிலையில் இன்று நடைபெறும் முதல் அரைஇறுதி போட்டியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 11.30 மணிக்கு நடக்கவுள்ளது. பெல்ஜியம் அணி முதல்முறையாக இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 
 
உலக கோப்பை போட்டியில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதிவுள்ளன. இந்த 2 போட்டிகளிலும் பிரான்ஸ் அணி தான் வெற்றி பெற்றுள்ளது. கால்பந்து தரவரிசை பட்டியலில் பெல்ஜியம் 3வது இடத்திலும், பிரான்ஸ் 7வது இடத்திலும் உள்ளது.