நாடாளுமன்ற தேர்தலில் ஊழல் கறை படிந்த வேட்பாளர்களுக்கு எதிராக வலுவான ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்

FILE

இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.இதற்காக மாநிலம் வாரியாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

Webdunia|
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேளையில், இத்தேர்தலில் போட்டியிட இருக்கும் ஊழல் கறை படிந்த 160 வேட்பாளர்களை எதிர்த்து வலுமிக்க ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சில நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. அந்த வேட்பாளர்கள் பற்றிய கருத்தை உடனே அனுப்பும் படி வாக்காளர்களுக்கு ஆம் ஆத்மி வேண்டுகோள் விடுத்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :