திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே
பராமரிப்பு பணி காரணமாக வரும் 31ஆம் தேதி வரை திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை சென்டிரலில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16057) வருகிற 31-ந்தேதி வரை ரேணிகுண்டா-திருப்பதி இடையே பகுதி நேரமாக ரத்துசெய்யப்படுகிறது.
அதே தேதிகளில், திருப்பதியில் இருந்து மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16058) திருப்பதி-ரேணிகுண்டா இடையே பகுதி நேரமாக ரத்துசெய்யப்படுகிறது.
அதேபோல, சென்னை சென்டிரலில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16053) வருகிற 31-ந்தேதி வரை ரேணிகுண்டா-திருப்பதி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
அதே தேதிகளில், திருப்பதியில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16054) திருப்பதி-ரேணிகுண்டா இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Edited by Siva