12 வகை பாரம்பரிய பலகாரம் - தீபாவளியை குறிவைக்கும் ஆன்லைன் வர்த்தகம்
இந்த தலைமுறைதான் அதிக வாழ்வியல் மாற்றங்களை கண் முன்னே கண்ட தலைமுறையாக இருக்கும். அப்படி இருந்தும் அதிக மாற்றத்திற்கு உள்ளாகாதது இந்த தீபாவளிக்கு கொண்டாட்டம். தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சி, கரிக் குழம்பு, புது படம், பட்டாசு என வெகுவாக நிறம் மாறாமல்தான் இருக்கிறது நம் தீபாவளிக் கொண்டாட்டங்கள்.
இந்த கொண்டாட்டத்தில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே பெரிதாய் நிகழ்ந்திருக்கிறது அது நமது வீட்டில் அல்லது நம்ம ஊர் பலகாரக்காரர்களிடம் இருந்து வாங்கி ருசிக்கும் பலகாரங்கள்.
மொறு மொறு அதிரசம், பதமான இனிப்பு சீடை என நாம் ரசித்து சுவைத்த பலகாரங்கள் இன்று இல்லை. அவற்றை மண் மணம் மாறாத கை பக்குவத்தில் செய்து வந்த பலகாரக்காரர்களும் இன்று விரல் விட்டு எண்ணும் அளவிற்கு குறைந்து விட்டார்கள். இப்படி இன்று நாம் இழந்து விட்ட பண்டங்களும், பலகாரக் குடும்பங்களும் ஏராளம்.
இப்படி ஒரு சூழலில் நம் பாரம்பரிய பண்டங்களை உலகம் முழுவது அதன் தன்னியல்போடு மண் மணம் மாறாமல் எடுத்துச் செல்லும் முயற்சியாக துவங்கப் பட்டதே நேட்டிவ்ஸ்பெஷல் இணையம். மாமி முறுக்கு ஐயா, மணல்மேடு சங்கரி அக்கா போன்றோர் இன்று தங்கள் கைமணத்துடன் பாரம்பரிய பண்டங்களை தொடர்ந்து செய்ய வழிவகை செய்து கொடுத்திருப்பதும் இந்த நேட்டிவ்ஸ்பெஷல் இணையம்தான். எடுத்துக் காட்டாக மாமி முறுக்கு ஐயா தனது 80 வயதில் இருக்கிறார், கிட்டத் தட்ட 50 வருடமாக ருசிகரமான நம்ம ஊர் பாரம்பரிய பண்டங்களை செய்து வருகிறார். மாவினை பதம் பார்க்கும் பொழுதே வெயில், பனி, மழை என கால நிலைக்கு ஏற்ப அதன் உள்ளளவை சரி செய்கிறார். இதனால் இவரது முறுக்கின் ருசி அதீதமாகவும் எண்ணெய் படியாமலும் இருக்கிறது. இது போன்ற எண்ணற்ற நம்ம ஊர் பலகாரக்காரர்களிடம் இருந்து ஒரிஜினலாக நம்ம ஊர் பலகாரங்களை உலகம் முழுவதும் டெலிவரி செய்யும் அசாத்திய முயற்சியில் குறிப்பிடத் தகுந்த வெற்றியை ஈட்டி இருக்கிறார்கள் நேட்டிவ்ஸ்பெஷல் இணைய இளைஞர்கள்.
இந்த தீபாவளிக்கு இவர்களின் இனிப்புப் பெட்டகங்கள் மண் மணத்துடன் பாக்கு மட்டையில் நேர்த்தியாக பேக்கிங் செய்யப்பட்டு தயார் செய்யப் படுகிறது. நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் ஆன்லைனில் (https://www.nativespecial.com/browse/tamil-diwali-sweets-online) ஆர்டர் செய்தால் நேரடியாக இந்தியாவில் 24 மணி நேரத்திலும், அமெரிக்கா, அமீரகம், ஐரோப்பா, லண்டன், சிங்கப்பூர் என அனைத்து நாடுகளுக்கும் ஐந்தே நாட்களிலும் அதிவேக டெலிவரி செய்கின்றனர்.
இந்த தீபாவளிக்கு இவர்கள் அறிமுகம் செய்திருக்கும் இனிப்புப் பெட்டகங்கள் பெயரைக் கேட்டாலே நாவூறும், சுவையமுத பெட்டகம் , பாரம்பரிய "பாட்டி ருசி" பெட்டகம், பேர் உவகை பெட்டகம், நலம் "பனஞ்சுவை" பெட்டகம் என நீளும். குருக்கத்தி இனிப்பு சீடை, வெள்ளியணை அதிரசம், கோவை எள்ளு உருண்டை, தூத்துக்குடி குச்சி மிட்டாய், சின்ன வெங்காய முறுக்கு என அட்டகாசமான இனிப்பு கார வகைகளுடன் இந்த பெட்டகங்களை வடிவமைத்திருக்கிறார்கள்.
முன்பே சொன்னது போல் ஒவ்வொரு பலகாரமும் ஒரு பாரம்பரிய பலகாரக் குடும்பத்தின் தொடர்ச்சியாக அவர்களுக்கான ஒரு வாய்ப்பாக அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. இந்த வருட தீபாவளியினை பாரம்பரிய பண்டங்களின் மணத்துடன் கொண்டாட விரும்புவோர் நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தில் கண்டிப்பாக ஆர்டர் செய்யலாம்.