வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Modified: செவ்வாய், 25 ஜூன் 2019 (16:45 IST)

பந்து வீச்சை தேர்ந்தெடுத்த இங்கிலாந்து: தன்னுடைய இடத்தை தக்கவைத்து கொள்ளுமா ஆஸி..

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 32 ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் தற்போது மோதுகின்றன.

இங்கிலாந்து நாட்டில், 2019 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இன்று 32 ஆவது லீக் போட்டியில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்ந்தெடுத்த நிலையில், தற்போது ஆஸ்திரேலிய அணி களமிறங்கி பேட்டிங் செய்கின்றன.

ஆஸ்திரேலிய அணி இதுவரை நடந்து முடிந்த 6 போட்டிகளில், 5 போட்டிகளை வென்ற நிலையில் தற்போது புள்ளிவிவரப் பட்டியலில் 2 ஆவது இடத்தில் இருக்கிறது.

இதை தொடர்ந்து இங்கிலாந்து அணி நடந்து முடிந்த 6 போட்டிகளில் 4 போட்டிகளை வென்ற நிலையில் தற்போது புள்ளிவிவரப் பட்டியலில் 4 ஆவது இடத்தில் இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணியும், இங்கிலாந்து அணியும் சம பலத்தையே கொண்டுள்ளதால், இன்று போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை என தெரியவருகிறது.

ஆனாலும் லீக் போட்டிகளில் முக்கியமான சுற்றாக இது பார்க்கப்படுவதால், இங்கிலாந்து தன்னுடைய ஆட்டத்தை மிகவும் கவனமாக கையாளும் என்பது குறிப்பிடத்தக்கது.