செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 21 ஜூன் 2019 (18:59 IST)

இவ்வளவுதான் இலக்கா? களமிறங்கபோகும் இங்கிலாந்து, என்னவாகும் இலங்கை?

இன்றைய உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தும், இலங்கையும் ஆடிக்கொண்டிருக்கும் நிலையில் மோசமாக விளையாடிய இலங்கை 232 ரன்களை மட்டுமே பெற்றுள்ளது.

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. பேட்டிங் ஆரம்பித்த வேகத்திலேயே கருனரத்னே, பெரேரா ஆகியோர் 1,2 ரன்களிலேயே அவுட் ஆனார்கள். தொடர்ந்து இறங்கிய ஃபெர்னாண்டோ நன்றாக விளையாடி அரை சதமடிக்க போகும் நிலையில் 49 ரன்களில் அவுட் ஆனார். மெண்டிஸும் அரைசதமடிக்க முயன்று 46 ரன்களில் அவுட் ஆனார். இருவரது ஆசையையும் நிறைவேற்றும் விதமாக மேத்யூஸ் 85 ரன்கள் எடுத்தார். பிறகு விளையாடியவர்கள் ஆட்டம் அனைத்தும் மிக மோசமாகவே இருந்தது. ரன்னே எடுக்காமல் கூட அவுட் ஆனார்கள். 50 ஓவரின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை 232 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணியோ 300 ரன்கள் என்பதையே குறைந்த பட்ச இலக்காக கொண்டு விளையாடுவார்கள். அவர்களுக்கு 234 ரன்களை இலக்காக வைத்திருக்கிறது இலங்கை. இந்த இலக்கை வெறும் 30 ஓவரிலேயே இங்கிலாந்து அடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த போட்டியில் இலங்கையின் வெற்றி வாய்ப்பு என்பது மிக மிக குறைவே!