வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 மே 2023 (15:19 IST)

நான் சின்ன பையன்.. எனக்கு சப்போர்ட் பண்ணுங்க! – தமிழில் பேசிய ஜெய்ஸ்வால்!

Jaiswal
நேற்றைய ஐபிஎல் போட்டியில் குறைந்த பந்துகளில் அரைசதம் வீழ்த்தி சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் தமிழில் பேசிய வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

ஐபிஎல் லீக் போட்டிகள் முடிவை எட்டி வரும் நிலையில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தாவை 149 ரன்களில் சுருட்டிய ராஜஸ்தான் அணி, அடுத்து சேஸிங்கில் 13 ஓவர்களிலேயே 151 ரன்களை குவித்து கொல்கத்தாவை வீழ்த்தியது.

இந்த போட்டியில் 13 பந்துகளிலேயே 50 ரன்களை குவித்து புதிய சாதனை படைத்தார் அணியின் இளம் நட்சத்திரம் ஜெய்ஸ்வால். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மலையாளியாக இருந்தாலும் தமிழ் பேசுபவர். அணியின் பந்துவீச்சாளர் அஷ்வினும் நல்ல தமிழில் பேசுவார். இதனால் ஒவ்வொரு போட்டி முடியும்போதும் அஷ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ஹல்லா போல் கொஞ்சம் நல்லா போல்” என்ற பெயரில் சுவாரஸ்யமான சில சம்பவங்களை வீடியோவாக பேசி வெளியிட்டு வருகிறார்.

Yashasvi Jaiswal


அந்த வகையில் ஒரு வாரத்திற்கு முன்னர் அவர்கள் பேசியிருந்த வீடியோவில் இளம் வீரர் ஜெய்ஸ்வாலையும் பேச வைத்திருந்தனர். தமிழ் அதிகம் தெரியாவிட்டாலும் தனக்கே உரிய அழகு தமிழில் “நான் சின்ன பையன்.. எனக்கு சப்போர்ட் பண்ணுங்க” என அவர் பேசியிருந்தார். தற்போது நேற்றைய ஆட்டத்தின் நாயகனான ஜெய்ஸ்வாலின் இந்த தமிழ் பேசும் வீடியோ மீண்டும் ரசிகர்கள் இடையே, சமூக வலைதளங்களில் வேகமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Edit by Prasanth.K

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Crikipidea (@crikipidea)