செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 11 மே 2023 (09:05 IST)

மணிஷ் பாண்டே இம்பேக்ட் ப்ளேயரா? அக்‌ஷரை கண்டுக்காத டெல்லி! – தோல்விக்கு இதுதான் காரணம்!

Axar Patel
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி – சிஸ்கே அணிகள் மோதிக் கொண்ட நிலையில் மிட்செல் மார்ஷின் விக்கெட் வீழ்த்தப்பட்ட சம்பவம் சிறப்பானதாக அமைந்தது.

ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட நிறைவை நெருங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளுக்கும் இடையேயான போட்டிகள் தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய சிஎஸ்கே – டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டியும் அப்படியே அமைந்தது.

டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங் எடுத்ததுமே 200+ ரன் இலக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் சிஎஸ்கே 167 என்ற இலக்கிற்குள் அடங்கியது. ஓபனிங் பேட்ஸ்மேன்கள் 20 சராசரி ரன்களில் அவுட் ஆனாலும், அடுத்தடுத்து வந்த எல்லாரும் அதே 20ஐ சராசரியாக எடுத்து வந்ததால் இந்த இலக்கை அடைய முடிந்தது.

எப்போது சேஸிங் இறங்கி பேட்டிங்கில் மாஸ் காட்டும் சிஎஸ்கே இந்த முறை பவுலிங், பீல்டிங்கில் மாஸ் காட்டியது. ஆரம்பமே டேவிட் வார்னர், பில் சால்ட் இருவருமே கேட்ச்சில் விக்கெட்டை இழந்தனர். அடுத்து கொஞ்சம் நின்று விளையாட கூடியவராக மிட்ஷெல் மார்ஷ் இருந்தார்.

Rahane Out'


மார்ஷ் ரன் அடித்துவிட்டு ஓட வேண்டிய இடத்தில் பந்து அருகிலேயே பிடிக்கப்பட்டதால் ரிட்டர்ன் சென்றார். ஆனால் இம்பேக்ட் ப்ளேயராக இறங்கிய மணிஷ் பாண்டே பேட்டிங் சைட் ஓடிவர, இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரஹானே மின்னலாக பாய்ந்து சென்று ஆப்போசிட் ஸ்டம்ப்பில் அடித்து அவுட் செய்தார்.

மிட்ஷெல் மார்ஷ் அவுட்டிற்கு பிறகு மனிஷ் பாண்டே, ரிலி ரோசோவ் நின்று ஆடினாலும் ரன்களை விட அதிகமான பந்துகளை அவர்கள் எடுக்க வேண்டியதாயிற்று. இதனால் டெல்லியின் ப்ளே ஆஃப் கனவு தகர்ந்தது. டெல்லி அணியில் அக்‌ஷர் பட்டேல் போன்ற நல்ல பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் அவரை டெல்லி கடைசியிலேயே களம் இறக்கியது. இதனால் சிக்ஸ், பவுண்டரி என அவர் விளாசினாலும் அணியை வெற்றி பெற செய்ய முடியவில்லை. அக்‌ஷர் பட்டேலை இம்பேக்ட் ப்ளேயராக இறக்க வேண்டிய இடத்தில் மணிஷ் பாண்டேவை இறக்கி டிசி தவறு செய்துவிட்டதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Edit by Prasanth.K