செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 14 அக்டோபர் 2023 (07:27 IST)

இன்றைய போட்டியிலாவது களமிறக்கப்படுவாரா முகமது ஷமி?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வரும் இன்று அகமதாபாத் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.

இந்த போட்டியில் இந்திய பிளேயிங் லெவன் அணி என்னவாக இருக்கும் என இந்திய ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். முதல் போட்டியில் அஸ்வினை களமிறக்கிய ரோஹித் ஷர்மா, இரண்டாவது போட்டியில் அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூரைக் கொண்டுவந்தார். அவர் போட்டியில் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

அதனால் இன்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அனுபவமிக்க ப்ளேயரான முகமது ஷமியை அணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சர்வதேச போட்டிகளில் மிகச்சிறந்த ரெக்கார்ட்களை வைத்துள்ள ஷமி, கடந்த சில மாதங்களாக ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறப்பாக பந்துவீசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.