ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 13 அக்டோபர் 2023 (14:19 IST)

அகமதாபாத் சென்று இறங்கிய பாகிஸ்தான் அணி!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வரும் 14ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை நேரில் பார்ப்பதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அகமதாபாத் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அகமதாபாத் நகரில் உள்ள ஹோட்டல் அறைகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. ஹோட்டல் அறை வாடகை வழக்கமான கட்டணத்தை விட 15 மடங்கு அதிகபடுத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஐதராபாத்தில் முதலிரண்டு போட்டிகளை விளையாடி வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக அகமதாபாத் சென்று சேர்ந்துள்ளது.