ஹர்திக் பாண்ட்யாவுக்கு மட்டும் ஸ்பெஷல் சலுகையா… பிசிசிஐ தரப்பு விளக்கம்!
இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவருமே சரியான உடல்தகுதியோடு இருந்தும் ரஞ்சிக் கோப்பை தொடரில் விளையாடாமல் ஐபிஎல் போட்டிக்கு தயாராகி வருகின்றன. அவர்களை பிசிசிஐ தரப்பில் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட அறிவுறுத்தியும் அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் இவர்கள் இருவரின் இந்த செயலால் இப்போது பிசிசிஐ அவர்களின் வருடாந்திர ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. சமீபத்தில் வீரர்களுக்கான புதிய ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை.
ஆனால் தற்போது எந்த போட்டியிலும் விளையாடாத ஹர்திக் பாண்ட்யாவுக்கு மட்டும் ஏ பிரிவில் 5 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக பிசிசிஐ தரப்பு “ ஹர்திக் பாண்ட்யாவின் உடல்தகுதி இப்போது ரஞ்சி கோப்பை விளையாடும் அளவுக்கு இல்லை. ஆனால் அவர் சையத் முஷ்டாக் அலி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே கோப்பை தொடர்களில் விளையாடுவதாக உறுதி அளித்துள்ளார். அதனால்தான் அவருக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளது.