வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (15:00 IST)

கடைசி மூன்று போட்டிகளில் இருந்தும் ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்?

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்துள்ள இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது. கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி விலகிய நிலையில் அவர் அடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது. காயத்தினால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய கே எல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் அணிக்கு திரும்புவார்கள் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் முதுகுவலி பிரச்சனைக் காரணமாக கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.