திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2024 (07:41 IST)

நாம் ஒவ்வொரு போட்டியிலும் நினைவுகளை உருவாக்குகிறோம்… ஆட்டநாயகன் விராட் கோலி நெகிழ்ச்சி!

17 ஆவது ஐபிஎல் தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில் தற்போது ஆரம்ப கட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்றைய போட்டியில் ஆர் சி பி மற்றும் பெங்களூர் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது.

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி நிதான ஆட்டத்தை மேற்கொண்டது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் அதிகபட்சமாக 45 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அதிரடியாக விளையாடினாலும் பெரிய அளவில் ரன்கள் சேர்க்காமல் விரைவிலேயே தங்கள் விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்களை இழந்தது.

அதன்பின்னர் ஆடிய பெங்களூர் அணி கோலி(77), தினேஷ் கார்த்திக்(28) ஆகியோரின் அதிரடியால் 4 பந்துகள் மீதமிருக்க இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது பேசிய அவர் “சின்னசாமி ஸ்டேடியத்தில் ரசிகர்களின் அன்பு பல ஆண்டுகளாகக் கிடைத்து வருகிறது. நீங்கள் விளையாட்டை விளையாடும்போது மக்கள் பல விஷயங்களைப் பற்றி பேசுகிறார்கள் - சாதனை, புள்ளிவிவரங்கள் மற்றும் எண்கள் என. ஆனால் நீங்கள் திரும்பிப் பார்க்கும்போது அது நீங்கள் உருவாக்கும் நினைவுகள். ஓய்வறையில் இருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்னர் ராகுல் டிராவிட் இதையே என்னிடம் கூறினார். இன்றும் அதையே கூறுகிறார்.

நீங்கள் விளையாடும் போது, ​​உங்கள் இதயத்தை வெளிப்படுத்துங்கள், ஏனெனில் நீங்கள் இந்த நேரத்தை இழக்கப் போகிறீர்கள். எனக்குக் கிடைத்த அன்பும், பாராட்டும், ஆதரவும் ஆச்சரியமாக இருக்கிறது. நான் அணிக்கு அட்டகாசமான தொடக்கத்தை கொடுக்க முயற்சிக்கிறேன், ஆனால் விக்கெட்டுகள் விழுந்தால், அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதன்பின்னர் பிட்ச்சுக்கு ஏற்றவாறு ஆடினேன். என்னால் கடைசி வரை இருந்து போட்டியை முடிக்க முடியவில்லை என்பது வருத்தமே” எனக் கூறியுள்ளார்.