தந்தை இறந்த மறுநாளே கிரிக்கெட் போட்டிக்கு சென்ற கோலி

Last Updated: திங்கள், 24 செப்டம்பர் 2018 (19:43 IST)
தந்தை இறந்த மறுநாளே விராட் கோலி கிரிக்கெட் போட்டியில் விளையாட சென்றதாக செய்தியை வெளியிட்டுள்ளார். 
 
இந்திய அணி தற்போது ஆசியக் கோப்பை போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இருந்து கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரை பற்றி நேஷனல் ஜியாக்ரபி சேனலில் ஆவணப்படம் ஒன்று எடுக்கப்பட்டு வருகிறது.   
 
கடந்த 2006 ஆம் ஆண்டு டெல்லி ரஞ்சி அணியில் இணைந்து விளையாடி வந்தார் கோலி. அப்போது டெல்லி அணிக்கும், கர்நாடக அணிக்கும் இடையே ரஞ்சி கோப்பை போட்டி நடந்து வந்ததாம். 
 
அன்றைய போட்டியை முடித்துக்கொண்டு வீட்டிற்கு சென்ற போது கோலியின் தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன் மரணமடைந்தார். தந்தையின் மரணத்தால் கோலி போட்டிக்கு வரமாட்டார் என அனைவரும் நினைத்துள்ளனர். 
 
ஆனால், டெல்லி, கர்நாடக அணியின் ரஞ்சிக் கோப்பை போட்டியில் தந்தையின் உடலை வீட்டில் கிடத்திவிட்டு விராட் கோலி கிரிக்கெட் விளையாட சென்றுள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகி பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :