ரசிகரை ஏமாற்றிய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி

Last Updated: வியாழன், 20 செப்டம்பர் 2018 (20:26 IST)
தொடர்ந்து ஓய்வில்லாமல் விளையாடி வந்த இந்திய அணி கேப்டன் கோலிக்கு தற்போது ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடவில்லை. அதனால் கோலிக்கு பதிலாக ரோகித் சர்மா இந்திய அணி கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் கோலி தன் மனைவி அனுஷ்காவுடன் மும்பை  விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.


அப்போது கோலியின் தீவிர ரசிகர் ஒருவர் அவருக்கு  பிரேம் போட்ட புகைப்படம் ஒன்றை வழங்கியிருக்கிறார். அது என்னவென்று கூட பிரித்து பார்க்காமல்  அதை அப்படியே தன் பாதுகாவலரிடம் கொடுத்துள்ளார் கோலி. இதனால் அவரது ரசிகர் மிகவும் ஏமாற்றம் அடைந்தார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :