வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 29 அக்டோபர் 2020 (08:58 IST)

வார்னருக்கு உதவினாரா நடுவர் – எல்பிடபுள்யு விவகாரத்தில் கிளம்பிய சர்ச்சை!

ஐபிஎல் போட்டிகளில் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை எனும் அளவுக்கு தினம்தோறும் ஏதேனும் சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.

அக்டோபர் 27 ஆம் தேதி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. அதில் ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் 17 ஆவது ஓவரை சந்திப் சர்மா வீசியபோது அஸ்வினுக்கு எல்பிடபுள்யு அப்பீல் கேடக்ப்பட்டது.

ஆனால் அம்பயர் நாட் அவுட் கொடுத்தார். இதனால் வார்னர் டிஆர் எஸ் கேட்கலாமா என யோசித்தார். ஆனால் அதற்குள் நடுவர் அனில் சௌத்ரி பந்து பேட்டில் பட்டு பிறகுதான் பேடில் பட்டது எனக் கூறினார். இதனால் வார்னர் அப்பீல் செய்யவில்லை. இது கிரிக்கெட் விதிமுறைகளின் படி தவறானது. இதனால் இப்போது நடுவர் ஒரு தரப்பாக செயல்பட்டார் என்ற சர்ச்சைக் கிளம்பியுள்ளது.