வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By siva
Last Updated : வியாழன், 29 அக்டோபர் 2020 (08:10 IST)

ஐபிஎல் தொடரில் பும்ரா புதிய சாதனை!

ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது என்பதும் தெரிந்தது 
 
இந்த நிலையில் நேற்று பெங்களூர் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் மும்பை அணி மிக அபாரமாக விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் அந்த அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ராஒரு புதிய சாதனையை செய்துள்ளார். ஐபிஎல் தொடரில் அவர் 100 விக்கெட்டை விக்கெட்டுகளை விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்று அவர் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அவர் 100 ஆவது விக்கெட்டை வீழ்த்திய சாதனையை புரிந்தார். இந்த சாதனையை செய்யும் 16வது வீரராக அவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் ஐபிஎல் தொடரில் பும்ராவின் முதல் விக்கெட்டும் விராட் கோலி தான் என்பதும் 100வது விக்கெட்டும் விராத் கோஹ்லி விக்கெட்டு என்பதும் ஆச்சரியமான ஒரு ஒற்றுமையாக உள்ளது. மேலும் டி20 போட்டிகளில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய 16வது இந்திய வீரர் என்ற மைல்கல்லையும் பும்ரா எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது