Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்தியாவிடம் சிக்கி தவிக்கும் இலங்கை

Last Modified: ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (17:48 IST)

Widgets Magazine

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் பேட்டி முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 135 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 352 ரன்கள் பின் தங்கியுள்ளது.


 

 
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடு வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியது.  
 
இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 487 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது. 
 
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி குல்தீப் யாதவ் பந்துவீச்சில் மடிந்தது. 135 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய 352 ரன்கள் முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து பாலோ ஆனை தவிர்க்க இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 19 ரன்கள் குவித்துள்ளது. 
 
இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. தற்போது இந்திய அணி 333 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி போலவே இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

இலங்கையை அதிரவிட்ட பாண்டியா

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 487 ரன்கள் ...

news

டோனி ரசிகரை கலாய்த்த முன்னாள் இலங்கை கேப்டன்

டோனி உலகின் அதிகவேக மனிதன் என கருதப்படும் உசைன் போல்ட் என்பவரை விட வேகமானவர் என்ற கருத்தை ...

news

ஸ்ரீசாந்த் மீது பிசிசிஐ விதித்த தடை நீக்கம் - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கத்தை ...

news

இன்னிங்ஸ் தோல்வி அடைந்த இலங்கை; டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா

கொழும்பில் நடைப்பெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் ...

Widgets Magazine Widgets Magazine