திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (14:05 IST)

இலங்கையை அதிரவிட்ட பாண்டியா

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 487 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.


 

 
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடு வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியது.  
 
இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 487 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது. தவான் 119 ரன்கள் குவித்தார்.
 
இலங்கை அணியை கதரவிட்ட பாண்டியா 96 பந்துகளில் 108 ரன்கள் குவித்து அசத்தினார். இதற்கு சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் பாண்டியாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.