செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (10:53 IST)

உண்மையான ‘தல’ தினேஷ் கார்த்திக்தான்..! எங்கள விட்டு போகாதீங்க DK! – ட்ரெண்ட் செய்யும் RCB ரசிகர்கள்!

Dinesh Karthick
நேற்றைய போட்டியில் ஆர்சிபி தோற்றிருந்தாலும் ரசிகர்கள் மனதை வென்ற தினேஷ் கார்த்திக்கிற்காக ரசிகர்கள் பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.



நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸின் 287 என்ற இமாலய இலக்கை தொடும் முயற்சியில் ஆர்சிபி அணி 262 ரன்களில் தோல்வியை தழுவியது. ஆனால் அந்த தோல்வியிலும் இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ரன்கள் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது ஆர்சிபி. அதற்கு முக்கிய காரணம் ஆர்சிபி அணி வீரர் தினேஷ் கார்த்திக்.

மிடில் ஆர்டரில் இறங்கிய தினேஷ் கார்த்திக் தனக்கு சரியான பார்ட்னர்ஷிப் கிடைக்காத போதும் நின்று போராடி 35 பந்துகளில் 87 ரன்களை அடித்துக் குவித்தார். இந்த போட்டி மட்டுமில்லை. இந்த சீசன் தொடங்கியது முதலே ஆர்சிபியின் அனைத்துப் போட்டிகளிலும் கடைசி வரை நம்பிக்கை தரும் நம்பிக்கை நட்சத்திரமாக தினேஷ் கார்த்திக் இருக்கிறார்.


நேற்றைய போட்டியில் ஆர்சிபி தோற்றாலும் ரசிகர்கள் மனதை தினேஷ் கார்த்திக் வென்றுவிட்டார். ஆனால் இதுதான் தினேஷ் கார்த்திக்கிற்கு ஐபிஎல்லில் கடைசி சீசன் என சொல்லப்படுகிறது. இதனால் ட்விட்டரில் பதிவிட்டு வரும் ரசிகர்கள் பலரும் தினேஷ் கார்த்திக் இந்த சீசனுடன் விலக கூடாது என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியில் தோனி வந்த காலக்கட்டத்தில் வந்தவர் தினேஷ் கார்த்திக். தோனி மாதிரியே தினேஷும் பேட்டர் + விக்கெட் கீப்பர்தான். ஆனால் தோனி அளவுக்கு தினேஷ் பிரபலமடையவில்லை. கிரிக்கெட்டில் அவர் ஒரு Unsung Heroவாகவே பார்க்கப்படுகிறார்,. இந்நிலையில் நேற்று ஐபிஎல் போட்டியில் பலகை பிடித்த ரசிகர் ஒருவர் ‘ரியல் தல தினேஷ் கார்த்திக்’ என போர்டு பிடித்துள்ளார். அதை எக்ஸ் தளத்தில் ஷேர் செய்துள்ள DK ரசிகர்கள் உண்மையான தல தினேஷ் கார்த்திக்தான் என பேசி வருகின்றனர். ஆனால் தினேஷ் கார்த்திக்கின் இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக அவர் உலகக்கோப்பை டி20ல் தேர்வாகலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

Edit by Prasanth.K