வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 15 டிசம்பர் 2023 (07:21 IST)

சூர்யகுமாரின் அபார சதத்தால் இந்திய அணி இமாலய வெற்றி… சமனான டி 20 தொடர்!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய மூன்றாவது டி 20 தொடர் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர்.

தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 41 பந்துகளில் 60 ரன்கள் சேர்க்க, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 56 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 201 ரன்கள் சேர்த்தது.

இதன் பின்னர் ஆடிய தென்னாப்பிர்க்கா அணி 14 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே சேர்த்தது.  அந்த அணியின் டேவிட் மில்லர் அதிகபட்சமாக 35 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி சார்பில் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

106 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. சதமடித்த சூர்யகுமார் ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.