ஜெய்ஸ்வாலை ரோஹித் கவனித்துக் கொண்டிருப்பார் என நினைக்கிறேன்… சுரேஷ் ரெய்னா தகவல்!
இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடி ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பலமாக உருவாகியுள்ளார் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால். அவர் 12 போட்டிகளில் 575 ரன்கள் சேர்த்துள்ளார். அவரை விட ஒரு ரன் அதிகமாக சேர்த்து டு ப்ளஸ்சி ஆரஞ்ச் கேப்பைக் கைப்பற்றியுள்ளார். கடந்த போட்டியில் 13 பந்துகளிலேயே 50 ரன்களை குவித்து புதிய சாதனை படைத்தார்.
இந்நிலையில் விரைவில் அவர் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கலாம். இதுபற்றி பேசியுள்ள முன்னாள் இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா “யஷஸ்வியின் ஆட்டத்தை இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பார்த்துக் கொண்டிருப்பார் என்றுதான் நினைக்கிறேன். அவருக்கு சிறந்த பேட்ஸ்மேன்கள் தேவை. ஜெய்ஸ்வால் சேவாக்கை நினைவு படுத்துகிறார். நான் தேர்வுக்குழுவில் இருந்தால் இன்றே அவரை உலகக்கோப்பைக்கு தேர்வு செய்திருப்பேன்.” எனக் கூறியுள்ளார்.