செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 10 ஜூன் 2023 (07:27 IST)

பெவிலியனில் தூங்கிய மார்னஸ் லபுஷான்.. திடீர்னு விக்கெட் விழுந்ததால் எழுந்து ஓடிய சம்பவம்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இப்போது லண்டன் ஓவலில் நடந்து வருகிறது. போட்டியின் மூன்று நாட்கள் முடிந்துள்ள நிலையில் ஆஸி அணி இரண்டாவது இன்னிங்ஸில் 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி 296 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் அஜிங்க்யே ரஹானே 89 ரன்கள் அதிகபட்சமாக சேர்த்தார். ஷர்துல் தாக்கூர் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற ஆஸி அணி இப்போது பேட்டிங் செய்து வருகிறது.

இரண்டாவது இன்னிங்ஸை ஆடவந்த ஆஸி அணியில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் வந்த சில நிமிடங்களில் ஆட்டமிழந்தார். இதனால் அடுத்து இறங்க வேண்டிய மார்னஸ் லபுஷான் அங்கு லேசான உறக்கத்தில் இருந்தார். அவுட் விழுந்து ரசிகர்கள் கத்தும் சத்தம் கேட்டதும் எழுந்த அவர் அதற்குள் விக்கெட் விழுந்து விட்டதா என பதறியடித்து மைதானத்துக்குள் ஓடினார். இந்த தருணம் வீடியோவாக சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)