செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 22 நவம்பர் 2019 (14:25 IST)

ஸ்டார்ட்டிங்க்லயே ”Trouble” ஆகும் வங்கதேசம்..

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் முதலாவதாக பேட்டிங்கில் இறங்கிய வங்கதேச அணி 50 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது.

இந்தியா-வங்கதேச அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. தற்போது நிலவரப்படி முதலாவது பேட்டிங்கில் இறங்கிய வங்கதேச அணி 16.3 ஓவர்களில் 53 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தற்போது களத்தில் லிடான் தாஸ் மற்றும் மஹமுதுல்லா ஆகிய பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர்.