கோலி தனது கேப்டென்சியை ராகனேவிடம் ஒப்படைக்க வேண்டும்!

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 22 ஜனவரி 2021 (14:12 IST)
கோலி தனது கேப்டன் பொறுப்பை ரகானேவிடம் வழங்க கோலி முன்வர வேண்டும் என பிஷன் சிங் பேடி பேட்டி. 

 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனையை படைத்தது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு புதிய வீரர்களின் திறமை புகழப்பட்டு வரும் நிலையில் டெஸ்ட் கேப்டனாக பதவி ஏற்ற ரஹானேவையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் இடது கை ஸ்பின்னர் பிஷன் சிங் பேடி அஜிங்கியா ரகானேவை வெகுவாக பாராட்டியுள்ளார். அவர் தனது சமீபத்திய பேட்டியில், எந்தவொரு கேப்டனுக்கும் தனிச்சிறப்பு என்னவென்றால், பந்துவீச்சாளர்களை கையாளும் திறன் தான், அதில் தான் ரகானே சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
 
கோலி பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும், எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் தொடரில் கேப்டன் பொறுப்பை ரகானேவிடம் வழங்க கோலி முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :