பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் காயம்… பந்துவீசிய சப்ஸ்ட்டியூட் வீரர் –இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா?
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று சென்னயில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 270 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு சென்றுள்ளது.
இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி பந்துவீசிய போது முதல் ஓவரிலேயே அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஷதாப் கான் தோள்பட்டை மற்றும் தலையில் அடிபட்டார். அவரை பரிசோதித்த பிசியோதரபிஸ்ட் அவருக்கு கன்கஷன் ஏற்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இதனால் களத்தை விட்டு வெளியேறிய அவருக்கு பதிலாக மாற்று வீரராக உஸாமா ஆடவந்து பந்துவீசினார். கன்கஷன் ஏற்படும் பட்சத்தில் மாற்று வீரர் அணியில் சேர்க்கப்பட்டு பேட்டிங் மற்றும் பந்துவீசலாம் என்பதை ஐசிசி அனுமதிக்கபட்ட விதியாகும்.