இப்போது கொண்டாட்டங்களுக்கு இடமில்லை…. ஆட்டநாயகன் விருது பெற்ற ஷபாஸ் அகமது!
ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபையர் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இந்த முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி ஆரம்பத்திலேயே சீரான வரிசையில் விக்கெட்டுகளை இழந்தது. க்ளாசன் மட்டும் ஓரளவு நிலைத்து விளையாடி 50 ரன்கள் அடித்தார். இதனை அடுத்து 20 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே ஐதராபாத் எடுத்துள்ளது.
இந்த எளிய இலக்கோடு களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐதராபாத்தை விட மிக மோசமாக பேட் செய்தது. அந்த அணி பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட நிலைத்து நின்று ரன்கள் சேர்க்கவில்லை. அந்த அணியின் ஜெய்ஸ்வால் 42 ரன்களும் துருவ் ஜுரெல் 55 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர். இதன் மூலம் மூன்றாவது முறையாக சன் ரைசர்ஸ் அணி இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது.
இந்த போட்டியில் மூன்று விக்கெட்களை வீழ்த்தியும், 18 ரன்கள் சேர்த்தும் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். அப்போது கொண்டாட்டங்கள் பற்றி அவரிடம் கேட்கப்பட்ட போது “இன்றிரவு எந்த கொண்டாட்டமும் இல்லை. இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகுதான் கொண்டாட்டம்” எனக் கூறியுள்ளார்.