1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 8 நவம்பர் 2024 (09:24 IST)

அந்த நாலு செல்லத்தையும் எப்படியாவது எடுத்துடுங்க… ஆர் சி பி அணிக்கு டிவில்லியர்ஸ் அறிவுரை!

எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு கடைசி ஆறு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று கம்பேக் கொடுத்து ப்ளே ஆஃப்க்கு சென்றது. ஆனால் ப்ளே ஆஃபில் தோற்று வெளியேறியது. இதன் மூலம் 17 ஆண்டுகளாக கோப்பையை வெல்லும் அந்த அணியின் கனவு நனவாகவே உள்ளது.

இந்நிலையில் அடுத்த சீசனுக்கான மெஹா ஏலம் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக கோலி, ரஜத் படிதார் மற்றும் யாஷ் தயாள் ஆகிய மூவரை மட்டும் அணியில் வைத்துக் கொண்டு மற்ற அனைவரையும் விடுவித்துள்ளது ஆர் சி பி அணி. இந்நிலையில் ஆர் சி பி அணியின் முன்னாள் வீரர் ஏ பி டிவில்லியர்ஸ் “ஆர் சி பி அணி ஏலத்தில் அஸ்வின், ரபடா, சஹால் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய நால்வரையும் எப்படியாவது எடுத்துவிட வேண்டும்” என அறிவுரைக் கூறியுள்ளார்.