1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 10 டிசம்பர் 2024 (09:43 IST)

ரோஹித் ஷர்மா அந்த தவறை செய்தால் அவர்தான் கசாப்புக் கடைக்கு செல்லும் ஆடு… முன்னாள் வீரர் எச்சரிக்கை!

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்று 1-1 என்ற கணக்குடன் சமனில் உள்ளன.

முதல் போட்டியில் இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா பங்கேற்கவில்லை. அதனால் தொடக்கக் கூட்டணியாக கே எல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் விளையாடினர். அந்த கூட்டணி சிறப்பாக செயல்பட்டதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அதேக் கூட்டணி ஆட்டத்தைத் தொடங்கியது. ஆனால் இரண்டாவது டெஸ்ட்டில் மொத்த பேட்டிங் யூனிட்டுமே சொதப்பியது.

இதனால் ரோஹித் மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக ஆடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் தோதா கணேஷ் “ஏற்கனவெ ரோஹித் ஷர்மா தன்னம்பிக்கை இன்றி ரன்கள் சேர்க்க முடியாமல் தடுமாறுகிறார்கள்.  இதனால் சிலர் மூன்றாவது போட்டியில் அவர் தொடக்க ஆட்டக்காரராக விளையாட வேண்டும் என சொல்கின்றனர். இது இந்தியாவில் நடக்கும் தொடர் இல்லை. பேட்டை எப்படியாவது சுழற்றி ரன்களை சேர்க்க. ஆஸ்திரேலியாவில் அவர் தொடக்க ஆட்டக்காரராக செல்வது என்பது கசாப்பு கடைக்கு செல்லும் ஆடு போலதான்” எனக் கூறியுள்ளார்.